எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் மகிழ்ச்சியில் ஆதரவற்றோர்

எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் மகிழ்ச்சியில் ஆதரவற்றோர் 



தஞ்சாவூரில் கொரனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆதரவற்றோரை கண்டு பிடித்து அவர்களை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது நாடு முழுவதும் தற்போது கொரனோ வைரஸ் பரவி உயிரிழப்புகள் நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதைப் போல் தஞ்சாவூரில் தஞ்சை மாநகராட்சி மற்றும் ரினிவல் பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் சுற்றி திரியும் ஆதரவற்றோர் வீடு இல்லாதோர்  மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் வீதிகளில் சுற்றி  திரியும் உணவின்றி தவிப்போர் என சுமார் 120க்கும் மேற்பட்டவர்களை கண்டறிந்து தஞ்சையில் உள்ள அரசு கல்லூரியில் தங்க வைத்து அவர்களை பாதுகாத்து அவர்களை குளிப்பாட்டி முடி திருத்தம் செய்து அவர்களுக்கு வேண்டிய உணவு புதிய உடை வழங்கி இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி ஆகியவற்றை செய்து கொடுத்து அவர்களுக்கு கொரனோ வைரஸ் தாக்காமல் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது இந்த பணியை தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமாக சமுதாய முன்னேற்றத்திற்காக செய்தனர் இவர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டினர். இந்த பணியில்.டி.எஸ்.பி.ரவிசந்திரன். அரண்மனை இன்ஸ்பெக்டர்.செங்குட்டுவன். மருத்துவ கல்லூரி இன்பெக்டர்.ஜெகதீசன். இன்டாக் முத்துக்குமார். மருத்துவர்கள் ராதிகா மைக்கேல். ஆகியோர் உடனிருந்து அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்தனர்.


" alt="" aria-hidden="true" />